'கோப்ரா' படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை காண ஆவலோடு இருக்கிறேன்: அஜய் ஞானமுத்து

I-look-forward-to-seeing-the-stunt-scenes-of--Cobra--on-screen--Ajay-Gyanamuthu

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனை படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து பாராட்டியிருக்கிறார்.


Advertisement

தமிழ் படம், களவாணி, மங்காத்தா, அட்டக்கத்தி, சுந்தரப்பாண்டியன், மரியான், ராஜாராணி, தனி ஒருவன், புலி, விசாரணை, விசுவாசம், நேர்கொண்ட பார்வை, வடசென்னை உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள திலிப் சுப்பராயன் விக்ரம் நடித்துவரும் கோப்ரா படத்திற்கும் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்திற்கும் பணியாற்றி வருகிறார்.

image


Advertisement

 இன்று திலிப் சுப்பராயனின் பிறந்தநாள் என்பதால் கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில்,  “உங்களுக்கு இதுமிகச்சிறந்த ஆண்டாக அமையும் மாஸ்டர். கோப்ரா படத்தில் உங்கள் சண்டைக் காட்சிகளை திரையில் காண ஆவலாக இருக்கிறேன்” என்று பாராட்டியுள்ளதால், வித்யாசமான காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

image

அஜய் ஞானமுத்து  டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement