’சசிகலா வெளிவந்தாலும் அதிமுகவுக்கு சிக்கல் வராது’: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுகவில் குழப்பம் என்பதே இல்லை. எல்லாமே பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய கருத்துகள்தான் என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்


Advertisement

இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் “அதிமுகவில் குழப்பம் என்பதே இல்லை. ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கவுள்ள சூழலில், பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய சில கருத்துகள் இருக்குமே ஒழிய இதில் குழப்பம் ஒன்றுமே இல்லை. அம்மாவின் மறைவிற்கு பிறகு பல சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறோம், ஆட்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறோம். இயற்கை இடர்பாடுகளை சிறப்பாக கையாண்டு பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறோம், அதனால் குழப்பம் அதிமுகவில் என்பதே இல்லை” என கூறினார்

image


Advertisement

மேலும் “முதல்வர் வேட்பாளர் குழப்பத்தினால் அமைச்சர்கள் மக்கள் பணியாற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையல்ல. தற்போதும்கூட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பாக பணியாற்றிவருகிறோம். சசிகலா வந்தபிறகு அதிமுகவுக்கு சிக்கல்வருமா என்று எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அந்த எதிர்பார்ப்பு வெற்றிபெறாது” என தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement