டாஸ் வென்றது மும்பை : ராஜஸ்தான் முதல் பவுலிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை அணி டாஸ் வென்றுள்ளது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசவுள்ளது.

image


Advertisement

மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த அணியில் ரோகித், டி காக், சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக், பொலார்ட், குருனல், பட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் உள்ளனர். அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணியில் ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஜெயதேவ் உனாட்கட் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கார்திக் தியாகி, அங்கிட் ராஜ்பூட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement