தமிழில் நான் ஈ, பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற படங்களில் நடித்த கிச்சா சுதீப், தெலுங்கின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான ’பவர் ஸ்டார்’ பவன் கல்யாணை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து மரக்கன்றுகளை பரிசளித்துள்ளார். இன்று தனது ட்விட்டர் பதிவில் “ஒரு எளிய மனிதரை சந்தித்தேன். உங்களுடன் உரையாடியது அற்புதமான நிகழ்வு என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கிச்சா சுதீப்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் அஜித் என்றழைக்கப்படுகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார் பவன் கல்யாண். ஆனால், சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தபோது, அதில் மாற்றுக்கருத்து ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜன சேனா என்ற கட்சியை ஏற்படுத்தி முழுநேர அரசியல்வாதியாய் மாறினார் பவன் கல்யாண்.
Met a simple grounded human @PawanKalyan i must admit. Wonderful interacting with you sir. pic.twitter.com/Da50XnKaUC — Kichcha Sudeepa (@KicchaSudeep) October 5, 2020
ஆனால், அவர் நினைத்தது போல் அரசியல் வெற்றிகரமாக அமையவில்லை. அதனால், மீண்டும் தற்போது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அதேபோல, நடிகர் கிச்சா சுதீப் கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர். கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ’சைரா நரசிம்ம ரெட்டி’தான், இவர் கடைசியாக நடித்து தெலுங்கில் வெளியான படம். இந்நிலையில், இன்று கிச்சா சுதீப் திடீரென பவன் கல்யாணை சந்தித்து உரையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!