”பாதுகாப்பு அச்சுறுத்தல்” - ஓலாவின் உரிமத்தை பறித்தது லண்டன்.!

London-transport-regulator-strips-Ola-s-operating-licence-over-public-safety-failings

பயணிகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி ஓலாவின், லண்டன் இயக்க உரிமத்தை பறித்தது லண்டனின் பொதுப் போக்குவரத்து ஆணையம்.


Advertisement

image

பெங்களூரைச் சேர்ந்த ஓலா நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் லண்டன் டாக்ஸி சந்தையில் நுழைந்தது. பொதுப் போக்குவரத்து சந்தையில் உபெர், ஃப்ரீனோவ் மற்றும் போல்ட் உள்ளிட்ட போட்டியாளர்களும், பாரம்பரியமான கருப்பு வண்டி ஓட்டுநர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக ஓலா உள்ளது என்று இந்நிறுவனத்தை ஆரம்பம் முதலே எதிர்த்தனர்.


Advertisement

இந்நிலையில் லண்டனுக்கான போக்குவரத்து ஆணையம் (டி.எஃப்.எல்) தனது அறிக்கையில்” ஓலா நிறுனத்தின் பொதுப் போக்குவரத்தில் அதிக எண்ணிக்கையிலான தோல்விகள் உள்ளது, அந்த நிறுவன செயலி சட்டதிட்டங்களுக்கு பொருந்தாத நிலையில் உள்ளது. மேலும் இது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” என்று தெரிவித்தது.

உரிம விதிமுறைகளை மீறுவது உட்பட ஓலாவின் நடவடிக்கைகளில் பல தோல்விகளைக் கண்டுபிடித்ததாகவும் டி.எஃப்.எல் கூறியுள்ளது. டி.எஃப்.எல் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஓலாவுக்கு 21 நாட்கள் அவகாசம் உள்ளது என்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

image


Advertisement

இது குறித்து கருத்து தெரிவித்த ஓலா “ மறுஆய்வு காலத்தில் டி.எஃப்.எல் உடன் இணைந்து செயல்படுவதாகவும், எழுப்பப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க உத்தரவாதங்களை வழங்கவும், அவற்றை திறந்த மற்றும் வெளிப்படையான முறையில் சரிசெய்யவும் முயல்கிறோம். டிஎஃப்எல்லின் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் " என கூறியுள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement