நாகையில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேதாரண்யத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

image

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்த தாய்க்கு துணையாக, தாயின் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரது 16 வயது சிறுமி அங்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு வேலைக்குச் சென்ற 16 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் விஜயன், அரவிந்தன் ஆகியோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாக அரவிந்தனின் மனைவி துர்காதேவி இருந்துள்ளார். 


Advertisement

image

இந்நிலையில், உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம், அவருடைய நண்பர்களான விஜயன், அரவிந்தன், மற்றம் அரவிந்தனின் மனைவி துர்காதேவி ஆகியோர் மீது வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்துள்ளார். சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 நபர்கள் மீது கடந்த ஒன்றாம் தேதி வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் மகளிர் காவல் நிலைய காவலர்கள், விஜயன், அரவிந்தன் அவரது மனைவி துர்காதேவி ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

 


Advertisement

 

image

மேலும் உணவக உரிமையாளர் சண்முக சுந்தரம் தலைமறைவாக இருப்பதற்கு அவரது சகோதரர் துணை புரிவதாகவும், காவல்துறை செல்வாக்கை பயன்படுத்தி தனது சகோதரன் சண்முக சுந்தரத்தை கைது செய்யாமல் தலைமறைவு என கூறிவருகின்றனர் என்றும் சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

 

image

 உடனடியாக சண்முகசுந்தரத்தை கைது செய்ய வேண்டுமென சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் மனு அளித்தனர். இதனையடுத்து சண்முகசுந்தரம் கைது செய்யப்படாத நிலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

image

 இந்நிலையில் நேற்று மாலை சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 16 வயது சிறுமிக்கு ஒரு பெண்ணே உடந்தையாக இருந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

loading...

Advertisement

Advertisement

Advertisement