அக்டோபர் 6: ஓடிடியில் வெளியாகும் பாலாவின் ’வர்மா’!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் தேவாரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் மாபெரும்  ஹிட் அடித்தது ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்தின் தமிழ் ரீமேக் ‘வர்மா’வை இயக்குநர் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ்  நடிகராக அறிமுகமானார். தாடியோடு துருவ் விக்ரம் பைக் ஓட்டும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், படமும் முழுமையடைந்து ரிலீஸுக்கு தயாரானபோது ‘பாலா படத்தை எடுத்த விதம் திருப்தியளிக்கவில்லை’ என்றுக்கூறி வர்மாவை கைவிட்டது தயாரிப்பு நிறுவனம்.


Advertisement

image

பின்பு, அர்ஜுன் ரெட்டியின் உதவி இயக்குநரை வைத்தே மீண்டும் ‘ஆதித்ய வர்மா’வை தயாரித்தது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான ’ஆதித்ய வர்மா’ எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை. இந்நிலையில், பாலா இயக்கிய ’வர்மா’ வரும் அக்டோபர் ஓடிடியில் வெளியாகும் என்று தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.


Advertisement

image

பாலாவின் படங்கள் தேசிய விருதுகளை குவித்தவை. விக்ரமை தமிழின் முன்னணி நடிகராக்கியது 1999 ஆம் ஆண்டு பாலா இயக்கிய சேது. இப்படம் சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. அதோடு, கடந்த 2003 ஆம் ஆண்டு பாலாவின் ‘பிதாமகன்’ விக்ரமுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெற்றுத்தந்தது.

image


Advertisement

தனது திறமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டிய பாலா இயக்கத்தில்தான் மகனையும் அறிமுகப்படுத்தவேண்டும் என்று விக்ரம் நினைக்கவேதான் வர்மா உருவானது. ஆனால், ஸ்டைலிஷான அர்ஜுன் ரெட்டியை பாலா பட ஹீரோக்கள் ஸ்டைலிலேயே படமாக்கப்பட்டதால் வர்மா வெளியாகாமல் போனது. இந்நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி Simply south ஓடிடி தளத்தில் ‘வர்மா’ வெளியாகவுள்ளதால்  ’ஆதித்ய வர்மாவா? வர்மாவா?’ எது பெஸ்ட் என்ற போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement