‘அரியர் மாணவர்கள் ஆல் பாஸ்’ அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது - ஏ.ஐ.சி.டி.இ.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

'அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை' என்று ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது .


Advertisement

அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (AICTE) சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

image


Advertisement

அதில், ''அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு யு.ஜி.சி. விதிகளுக்கு புறம்பானது. இறுதிப் பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கும் முரணானது.

இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை’’ என்று AICTE தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement