சோனு சூட்டுக்கு ஐ.நாவின் மனிதாபிமான விருது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. அதனால், மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் நடிகர் சோனு சூட்.


Advertisement

image

அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்தார். மேலும், ட்விட்டரில் பல்வேறு கோரிக்கை வைத்து உதவி கேட்கும் ஏழைகளுக்கு உதவி வந்தார். அவரின் சேவையை பாராட்டி ஐ.நா மேம்பாட்டுத் திட்டத்தின் ’சிறப்பு மனிதநேய விருது’ கடந்த திங்கள் கிழமை மாலை சோனு சூட்டிற்கு வழங்கப்பட்டது.


Advertisement

 image

ஏற்கெனவே பிரியங்கா சோப்ரா, ஏஞ்சலினா ஜூலி, டேவிட் பெக்காம், லியோனார்டோ டிகாப்ரியோ ஆகிய உலக புகழ் பெற்றவர்கள் மட்டுமே பெற்றிருக்கும் இவ்விருதினை சோனு சூட்டும் இப்போது பெற்றுள்ளார். கொரோனா தொற்றின் கடினமான சூழலில் மக்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவியதாலேயே சோனு சூட்டிற்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

 image


Advertisement

இதுகுறித்து சோனு சூட் பேசும்போது, “இது ஒரு அரிய மரியாதை. ஐ.நா அங்கீகாரம் சிறப்பு மிகுந்தது. என் நாட்டு மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்கிறேன்” என்று கூறியுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement