அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7-ஆம் தேதி ஒபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது சில அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முடிவை இன்றே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. அதில் சிலர் பன்னீர்செல்வம் தான் முதல்வர் வேட்பாளர் என பேசியதாக தெரிகிறது. இதனால் சர்ச்சை எழுந்ததாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் கேபி முனுசாமி கூறுகையில், “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
Loading More post
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் - மோசடி செய்து முதல் பரிசு பெற்றது அம்பலம்?
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!