போதைப்பொருள் சர்ச்சை... விசாரணையில் அழுத தீபிகா படுகோன்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட்டை உலுக்கிவரும் போதைப்பொருள் விவகாரத்தில் தீபிகா படுகோ‌ன், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட நடிகைகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்‌வுக்காக அனுப்பியுள்ளனர்.


Advertisement

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக, அவரது காதலி ரியா சக்ரவர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலருக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சம்மன் அனுப்பியது.

image


Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை ரகுல் ப்ரீத் சிங், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் விசாரணைக்காக ஆஜரானார்கள்.

கடந்த 2017ஆம் ஆண்டு போதைப் பொருள் குறித்து விவாதிப்பதற்கு என இயங்கிய வாட்ஸ்அப் குழுவிற்கு தீபிகா படுகோன் அட்மினாக இருந்ததாக ஏற்கெனவே தகவல் வெளியானது. ஆறு மணி நேரம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் போது தீபிகா படுகோன் மூன்று முறை அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு பிறகு தீபிகாவிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதேபோல சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடமும் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு அனைவரின் செல்போன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செல்போன்கள் அனைத்தும் தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement