'பணம் கொடுத்தால் வேலை உண்டு.. ' ஆன்லைன் மோசடியில் ரூ.8.6 லட்சம் இழந்த பெண்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
புனேவைச் சேர்ந்த 43 வயது பெண்ணிடம் ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.6 லட்சத்தை ஏமாற்றியுள்ளனர்.
 
புனே அருகேயுள்ள ஹடப்சரில் வசிக்கும் 43 வயது பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆன்லைன் வேலை தேடல் போர்டலில் தனது சுய விபரக் குறிப்பை பதிவு செய்து உள்ளார்.
 
இந்நிலையில் இப்பெண்ணை தொடர்பு கொண்ட ஒருவர், ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுப்பதாகவும், அதிக சம்பளத்துடன் நல்ல வேலை இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணை தங்கள் இணையதளத்திற்கு சென்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரங்களுக்கு செயலாக்கக் கட்டணமாக 11,91,611 ரூபாயை ஆன்லைனில் செலுத்தவும் கேட்டுள்ளனர்.
 
image
 
இதனை நம்பிய அந்த பெண் அவர்கள் கேட்ட பணத்தை அப்படியே டிரான்ஸ்பர் செய்துள்ளார். பணத்தைப் பெற்றபிறகு அவர்களிடமிருந்து எந்த விவரமும் வரவில்லை.
 
ஆட்சேர்ப்பு நிறுவன ஊழியர்கள் என்று கூறிக்கொண்ட அந்த நபர்களை மீண்டும் அழைத்து, தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு ரூ.3,39,014 பணத்தைத் திரும்ப செலுத்தியுள்ளனர். ஆனால் பலமுறை அவர்களைத் தொடர்பு கொண்ட பிறகும் மீதமுள்ள ரூ.8,60,597 கிடைக்கவில்லை.
 
அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போகவே இவை அனைத்தும் போலி என அறிந்து அந்த பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
loading...

Advertisement

Advertisement

Advertisement