வயர் இல்லாத புதிய WF-H800 ஹெட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது சோனி நிறுவனம். சார்ஜிங் பாக்ஸ் வசதியுடன் வந்திருக்கும் இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணிநேரம் பயன்படுத்தலாம். அதாவது 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 70 நிமிடங்கள் தாராளமாக பயன்படுத்த முடியும். ஹெட்செட்டில் 8 மணிநேரம் வரைக்கும் பயன்படுத்தக்கூடிய பேட்டரி வசதி இருக்கிறது. இதுதவிர சார்ஜிங் பாக்ஸில் 8 மணிநேரம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்.
பேருந்து.. கார்...பைக்.. மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தும் மத்திய அரசு..!
சிறப்பம்சங்கள்
இந்த ஹெட்செட்டில் பேட்டரி ஆயுள் 16 மணிநேரம் ஆகும். இதில் டிஜிட்டல் ஒலி மேம்பாட்டு இயந்திரம் இருப்பதால் கேட்கும் ஒலியை மேம்படுத்திக் கொடுக்கிறது.
இந்த ஹெட்செட் பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே ஆன் ஆகும். அதாவது காதில் மாட்டியிருந்தால் தானாக ஆன் ஆகும். தாமதமின்றி புளூடூத் பரிமாற்றமும் செய்துகொள்ளலாம்.
இதன் எடை வெறும் 7.6 கிராம் மட்டுமே. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் என எதில் பயன்படுத்தினாலும் கூகுள் அசிஸ்டண்ட், அலெக்ஸா, சிரி என அனைத்துக்கும் சப்போர்ட் செய்யும். மேலும் ப்ளே ஸ்டோரில் சோனி ஹெட்போன் இணைப்பு செயலியை தரவிறக்கம் செய்து ஹெட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம்.
வாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம்
என்ன விலை மற்றும் எங்கு கிடைக்கும்?
இதன்விலை தற்போது இந்திய மதிப்பில் ரூ.14,990 ஆக நியமிக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் சோனி கடைகளில் செப்டம்பர் 24ஆம் தேதியிலிருந்து கிடைக்கிறது.
சமீபத்தில் ஒலி இரைச்சலைக் கட்டுப்படுத்தும் WH-1000XM4 ஹெட்போனையும் சோனி இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்விலை ரூ.29,990.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!