வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் - சீமான்

tamil-eelam--tamil-nation-spoken-persons-are-now-alliance-with-againt-that-principle-parties-says-seeman

நாம் தமிழர் கட்சி வரும் சட்டமன்றதேர்தலில் தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம்  பேசிய சீமான் “நான் வீழ்ந்தாலும் தமிழ்  வாழ வேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ் ஈழம், தமிழ் தேசியம் என்று பேசியவர்கள் தற்போது அதற்கு எதிரானவர்கள் உடனே கூட்டணி வைத்து இருக்கிறார்கள். அதனால்தான் தற்போது அவர்களால் தமிழ் தேசியம் தமிழ் ஈழம் பற்றிப் பேச முடியாமல் இருக்கிறார்கள். நாங்கள் எந்த காலத்திலும் திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம்.


Advertisement

நாம் தமிழர் கட்சி வரும் சட்டமன்றதேர்தலில் தனித்து போட்டியிடும், பாதி தொகுதிகளுக்கு மேல் வேட்பாளர்களை நியமித்து களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது, இல்லை என்றால் முழுவதுமாக வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement