திருமணத்திற்குப் பிறகு புறக்கணித்த காதலி - வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

டெல்லியைச் சேர்ந்தவர் சுமித் தாமர். 27 வயதான சுமித் தாமர் ஒரு பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வேறொரு பெண்ணுடன் 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதனால், அவருடைய நீண்ட கால காதலி அவரைப் புறக்கணித்துள்ளார். புறக்கணிப்பை தாங்கிக்கொள்ள முடியாத தாமர், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளார். டெல்லி ஆலி விஹார் பகுதியில் உள்ள தரம்பால் காலியில் தன்னுடைய பெற்றோருடன் அந்த பெண் வசித்து வருகிறார்.

தன்னுடைய வீட்டின் வெளியே துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு அந்த பெண் கதவை திறந்து வெளியே பார்த்துள்ளார். அப்போது, தாமர் கைகளில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருந்துள்ளார். வெளியே பார்த்த அந்தப் பெண்ணிடம், உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். வீட்டின் முன் பகுதியில் சிதைந்து இருந்ததையும் கண்டுள்ளார்.


Advertisement

image

இதனையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தார் போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக தன்னை கொலைசெய்து விடுவதாக மிரட்டி பேச வைத்ததாக, புகாரில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுட்டு வீட்டின் கேட்டை சேதப்படுத்திய அந்த இளைஞர் ஆலி விஹாருக்கு அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்கி இருந்ததை போலீஸார் கண்டுபிடித்து கைதுசெய்துள்ளனர்.

தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாததால், அவரை கொலைசெய்யும் எண்ணத்தில் ஆக்ராவிலிருந்து துப்பாக்கி வாங்கிவந்ததாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.


Advertisement

 

மனிதர்களுக்கு இடையிலான பகையில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை: திருச்சியில் சோகம் 

loading...

Advertisement

Advertisement

Advertisement