“பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” : பொன்.ராதாகிருஷ்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Advertisement

நெல்லையில் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது. வரும் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். தேமுதிக கிங்க் ஆக இருக்கபோவதாக சொல்வதற்கு வாழ்த்துகள். அவர்கள் தன்னம்பிக்கை மூலம் கட்சியை நடத்துகிறார்கள். எதிர்க்கட்சிகளிடம் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சமிருக்கிறது. திமுக தலைவரை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் கூட்டணி சிதறு தேங்காய் போல உடைந்துவிடும்.

image


Advertisement

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தான் போட்டியிடும். சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக இடைதேர்தல் வந்துவிட்டது. அதற்கான பணியினை நான் தொடங்கிவிட்டேன்” என்றார். அதிமுக அமைச்சர்கள் பாஜகவினரை பற்றி பேசுவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், “கூட்டணியில் வால்கள் ஆடுவதை பற்றி கவலையில்லை. வாய் என்ன சொல்கிறது என்பதே முக்கியம்” என்றார். மேலும், விவசாயம் குறித்து தெரியாத ஸ்டாலின் முதல்வர் குறித்து கருத்துகூற அருகதை இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.

நம் இனிய ’பெண்’ நிலா! – நடிகை ஷோபாவின் பிறந்தநாள் இன்று!

loading...

Advertisement

Advertisement

Advertisement