முற்றிய வாக்குவாதம்.. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி சுட்டுக்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துவாரகாவில் ஏற்பட்ட சண்டையின் போது ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.


Advertisement

டெல்லி துவர்கா ஏரியாவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான பால்ராஜ் தேஷ்வால்(55). இவர் ரியல் எஸ்டேட் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே பிரதீப் கோகர் என்பவர் தேஷ்வாலிடம் 5 லட்சம் வரை கடன் பெற்றிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தேஷ்வால் தனது குடியிருப்புக்கு கீழே நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரதீப் கோகர் தேஷ்வாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கோகர் தேஷ்வாலை துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து தேஷ்வால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Advertisement

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் கோகரை தேடி வருவதாக துணை போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் மீனா தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement