செல்ல நாய் முகத்தைப் போல விளைந்த உருளைக்கிழங்கு - மகிழ்ச்சியில் விவசாயி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜோன் குட்ஜெர் என்பவர் உருளைக்கிழங்கு சாகுபடியில் தனது நாயைப் போலத் தோற்றமளிக்கும் உருளைக்கிழங்கை கண்டுபிடித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளார்


Advertisement

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் குட்ஜெர் தனது தோட்டத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்துள்ளார். உருளைக்கிழங்குகள் நன்கு விளைந்ததும் மண்ணிலிருந்து தோண்டி எடுத்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம், தான் 13 வருடங்களாக வளர்த்துவரும் டேவ் என்ற செல்ல நாயின் முகம் போலவே ஒரு உருளைக்கிழங்கு இருந்ததைப் பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார்

பின்னர் தனது குடும்பத்தினரிடம் காட்டி மகிழ்ச்சியடைந்துள்ளார். காரணம், ஜோன் குட்ஜெர் ஆசையாக வளர்த்துவரும் நாய் டேவ் குணப்படுத்த முடியாத நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது குடும்பமே சோகத்தில் உள்ளார்கள். தற்போது அதே தோற்றமுடைய உருளைக்கிழங்கு கிடைத்துள்ளதால் அவரது குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்.


Advertisement

image

அந்த உருளைக்கிழங்கை சமைக்காமல் பாதுகாத்தும் வருகிறார்கள். தனது செல்ல நாய் டேவ்க்கு ‘உருளைக்கிழங்கு தலை டேவ்’ என்று பெயரும் வைத்து கொஞ்சி வருகிறார்கள். இதனை தனது பேஸ்புக் பகத்தில் பதிவிட்டுள்ளார் ஜோன் குட்ஜெர்.

இதையும் படிக்கலாமே...தமிழ் சினிமாவின் த்ரில்லர் கிங்: மிஷ்கின் பிறந்தநாள் இன்று!


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement