சென்னை: பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்கள் விற்பனை

man-arrested-due-to-Selling-counterfeit-goods-in-the-name-of-a-famous-company-in-chennai

சென்னையில் பிரபல மின்னணு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்களை விற்பனை செய்த கடை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சென்னை சவுக்கார்பேட்டையில் மின்னணு உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய சந்தை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் தமிழ்நாடு எலக்ட்ரிகல்ஸ் பேலஸ் என்ற கடையும் செயல்பட்டு வருகிறது. பல முன்னணி நிறுவனங்களின் மின்னணு பொருட்களை விற்பனை செய்து வரும் இந்தக் கடையில் ஆர்பிட் நிறுவனத்தின் பெயரிலான போலி வயர்களை விற்று வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் ரவீந்திர குமாருக்கு தகவல் கிடைத்தது.

image


Advertisement

இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களோடு யானைகவுனி காவல் நிலையத்தில் ஆர்பிட் மண்டல மேலாளர் பிரவின் குமார் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழ்நாடு எலக்ட்ரிகல்ஸ் பேலஸ் கடையில் சோதனை நடத்தியதில் சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான போலி ஆர்பிட் நிறுவன வயர்களை பறிமுதல் செய்தனர்.

image

மேலும், அந்நிறுவனத்தின் நிர்வாகியான குந்தன் பிரதாப் சிங் என்பவரை கைது செய்தனர். ஆர்பிட் நிறுவனத்தின் உபகரணங்கள் போன்று போலியாக உபகரணங்களை தயாரித்து, சந்தையில் நீண்ட காலமாக விற்று வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இவர்கள் மேலும் பல பிரபல நிறுவனங்களின் உபகரணங்களையும் விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் என்பதால், அவையும் போலியானதா என சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க சிபிசிஐடியின் அறிவுசார் சொத்துரிமை புலனாய்வு பிரிவுக்கு மாற்றுவதற்கான ஆலோசனையில் காவல்துறையினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement