"வேளாண் மசோதாவை திருத்துங்கள்”-டிடிவி.தினகரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்காமல் மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள மசோதாக்களில், விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை திருத்தம் செய்யவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “விவசாயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல. இம்மசோதாக்களில் உள்ள விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் அவற்றை கொண்டுவர வேண்டும். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையில் செயல்படுத்தப்படும் எத்தகைய மாற்றமும் விவசாயிகளுக்குப் பயன்தருவதாக மட்டுமே அமைய வேண்டும். அதைவிட்டு விட்டு ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement