1997-ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முன்னாள் மாடல் அழகி புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

1997 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ட்ரம்ப் தனது விஐபி அறையில், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முன்னாள் மாடல் அழகி ஆமி டோரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1997 ஆம் ஆண்டில் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் மாடல் அழகி ஆமி டோரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் டிரம்ப் தனது விஐபி அறையில், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பிரிட்டனின் தி கார்டியன் ஊடகத்திடம் ஆமி டோரிஸ் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ட்ரம்ப் தனது வழக்கறிஞர்கள் வழியாக மறுத்ததாகவும் அவர் கூறுகிறார்.


Advertisement

” அப்போது அவர் என்னை முத்தமிட்டார், முழுவதுமாக அப்போது நான் அவரது பிடியில் இருந்தேன், அதிலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை," என்று அவர் மேலும் கூறியுள்ளார். 1990 களின் நடுப்பகுதியில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரின் அறையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க முக்கிய கட்டுரையாளர் ஈ. ஜீன் கரோல் கூறியது உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் எதிர்கொண்டுள்ளார்.

image

இந்த சம்பவங்கள் நடந்தபோது ஆமி டோரிஸுக்கு 24 வயது. அப்போது ட்ரம்ப் 51 வயதாக இருந்தார், அப்போது ட்ரம்ப் அவரது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸை மணந்தார் என்று டோரிஸ் கூறினார். மேலும் ட்ரம்பின் நிறுவனத்தில் எடுத்த பல புகைப்படங்களையும் அவர் காண்பித்தார், மேலும் பலரும் அவரது கணக்கை உறுதிப்படுத்தினர்.


Advertisement

ஆனால் ட்ரம்பின் வக்கீல்கள், ஊடகத்தில் வெளியாகியுள்ள டோரிஸின் பதிப்பு நம்பமுடியாதது என்றும் அவர் பாதிக்கப்பட்டிருந்தால் மற்ற சாட்சிகள் இருப்பார்கள் என்றும் கூறினார்கள். நவம்பர் 3 அன்று நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் ஜோ பிடனை எதிர்கொள்ளவிருக்கும் சில வாரங்களுக்கு முன்னதாக, இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement