[X] Close

கேரளாவில் ஆறு மாதங்களில் 140 தற்கொலைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த ஆறு மாதங்களில் கேரளாவில் 140 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கேரளா என்றாலே நம் எல்லோரது நினைவுக்கும் வருவது அதன் அழகிய கடற்கரைகளும் பச்சை பசேலென்ற இயற்கையின் கொடையும்தான். அதனாலேயே, கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட கேரளா தற்போது இளைஞர்களின் தற்கொலை நரகமாகியுள்ளது. திஷா என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் கடந்த ஜனவரி 2020 முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 140 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

image


Advertisement

திருவனந்தபுரத்தில் மட்டும் 22 இளைஞர்களும், மலப்புரத்தில் 20 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. கிராமக் குழந்தைகள் பாதுகாப்பு சபைகளின் பயனற்றத் தன்மையால் இளைஞர்களிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் ’இது மிகவும் தீவிரமான சமூக பிரச்சனை’ என்று கூறியுள்ளவர், இதனைத் தடுக்க சிரி என்ற டெலி கவுன்சிலிங் மையத்தையும் துவக்கியுள்ளார்.

image

அதோடு,கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அந்தோனி டொமினிக் இளைஞர்களிடையே தற்கொலையைத் தடுக்க சமூக நீதித்துறை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை கோரியிருக்கிறார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement