நீட் தேர்வு: திமுகவுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி !

TN-CM-Palanisamy-questions-opposition-leader-Stalin-over-NEET-issue

நீட் தேர்வை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த போது கூட்டணியில் திமுக இருந்ததா இல்லையா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.


Advertisement

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதற்கு மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது "மாணவர்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை. மசோதாக்களுக்கு அனுமதியும் வழங்கவில்லை.அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், கண்டுக்கொள்ளாத அதிமுக அரசை எதிர்த்தும் பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும்"

image


Advertisement

மேலும் "நீட் தேர்வு தாள்களிலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது இந்த மாதம் 3 மாணவர்க்ள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். தாலியை கழற்றி வைத்து விட்டு தேர்வு எழுதும் கொடுமை நடந்துள்ளது. கலைஞர் ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு கொண்டு வரவில்லை" என்றார் ஸ்டாலின்.

image

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி "2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த போது கூட்டணியில் திமுக இருந்ததா இல்லையா" என கேள்வி எழுப்பினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement