நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு - 12 பேர் உயிரிழப்பு, 21 பேர் மாயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நேபாளத்தில் கொடூரமாகப் பெய்த கனமழையால் 2 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Advertisement

இந்திய சீன எல்லையான திபெத்துக்கு உட்பட்ட காத்மண்டு பகுதியில் பாரபைஸ் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் இறந்ததாக நேபாள அரசு அதிகாரி முராரி வஸ்தி தெரிவித்துள்ளார். வடமேற்கு பகுதி, பக்லங் கிராமத்தைச் சேர்ந்த மற்ற 2 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு கிராமங்களிலுமே திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மக்களால் தப்பித்துச் செல்ல முடியவில்லை எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜூன் - செப்டம்பரில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 111 பேர் காணாமல் போயுள்ளனர். 160 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் வஸ்தி தெரிவித்துள்ளார்.

 

 


Advertisement

 

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement