அமெரிக்க நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்ற ஆந்திர இளம் பெண் மரணம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் கால் சறுக்கி விழுந்து நீருக்குள் மூழ்கி மரணம். 


Advertisement

image

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா. பொறியியல் பட்டதாரியான இவர் மேல்படிப்புக்காக அமேரிக்கா சென்று படித்து வந்துள்ளார். தற்போது அங்கு அவருக்கு வேலையும் கிடைத்துள்ளது. அவருக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில் அடிலாண்டாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது வருங்கால கணவருடன் சென்றுள்ளார். 

பின்னர் அங்கிருந்து அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வழியில் இருந்த பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். 

image


Advertisement

எதிர்பாராத விதமாக கால் சறுக்கி இருவருமே நீருக்குள் வீழ்ந்துள்ளனர். அதில் கமலா நீருக்குள் மூழ்கி இறந்த நிலையில் அவரது வருங்கால கணவரை மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளனர். 

கமலாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

loading...

Advertisement

Advertisement

Advertisement