கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானது உண்மைதான் -  சீன ஆராய்ச்சியாளர் பரபரப்பு தகவல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவின் பரிசோதனைக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது உண்மைதான் என வைரஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.


Advertisement

ஹாங்காங்கை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் லீ-மெங் யான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறுகையில், ''கொரோனா வைரஸ் பரவலை சீன அரசு மறைக்கிறது. சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி வெளியே பரவியது? ஏன் இதை உருவாக்கினார்கள்? என்று என்னால் விளக்க முடியும். கொரோனாவின் ஜீனோம் தொடரானது மனிதர்களின் கைரேகை போன்று காணப்படுகிறது. இதன்மூலம் உண்மை என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


Advertisement

image

 என்னிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு உயிரியல் சார்ந்த ஆழ்ந்த அறிவில்லை எனினும், எனது ஆதாரங்கள் மூலம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சீன அதிகாரிகள் தன்னை மிரட்டியதால் தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் டாக்டர். லீ-மெங் யான் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement