மளிகை கடைக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்; 60 வயது முதியவர் உள்ளிட்ட மூவர் கைது!

16-year-old-girl-raped-by-60-year-old-man-and-3-others-inside-grocery-shop

பஞ்சாபில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது முதியவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

பஞ்சாபின் பாட்டியாலாவில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் மளிகைக் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது 60 வயதான முதியவர் ஒருவரும், 18 முதல் 28 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களும் சேர்ந்து சிறுமியை பலவந்தமாக கடைக்குள் இழுத்துத் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன சிறுமி ஒரு மாதமாக யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். எனினும் சிறுமியின் நடத்தையில் வித்தியாசத்தை உணர்ந்த அவரது பெற்றோர் விசாரித்ததில் மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்து திடுக்கிட்டனர்.


Advertisement

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement