துப்பாக்கி முனையில் செல்ஃபி எடுக்க முயற்சி: குண்டு வெடித்து உயிரிழந்த 17 வயது சிறுவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பீகார் மாநிலம் கோபாலகாஞ் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் துப்பாக்கி பிடித்தபடி செல்ஃபி எடுக்க முயன்ற போது தவறுதலாக ட்ரிகரில் கைப்பட்டதால் குண்டு வெடித்து உயிரிழந்துள்ளார். 


Advertisement

image

துப்பாக்கியிலிருந்து வெடித்த குண்டு சிறுவனின் தலையில் பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். 


Advertisement

பொறியியல் கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அந்த சிறுவன் கடந்த வாரம் தான் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுவன் நுழைவுத் தேர்வை சரிவர எழுதவில்லை என மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறுவனின் குடும்பத்தினர் சொன்னதாக தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் இது விபத்தா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement