[X] Close

‘வாரந்தோறும் அதிக பணம் டெபாசிட்’- வாடிக்கையாளருக்கு ஸ்கெட்ச் போட்ட வங்கி மேலாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கியில் பணம் டெபாசிட் செய்ய வந்த வாடிக்கையாளரிடமிருந்து திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்ததோடு அவரை கொலை செய்த குற்றத்திற்காக வங்கி மேனேஜர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிகில் குப்தா. இவர் அங்குள்ள விஸ்வகர்மா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர் ஏயூ வங்கியில் அடிக்கடி அதிக பணம் டெபாசிட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதுபற்றித் தெரிந்த வங்கி மேலாளர் வினீத் சிங் கவுர், ஆள்வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, சேத்தன் சிங் மற்ற்ம் ரிஷி ராஜ் சிங் என்பவர்களை உத்தர பிரதேசத்திற்கு அனுப்பி துப்பாக்கி வாங்கி வந்துள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டதின்பேரில், திங்கட்கிழமை வங்கிக்கு பணத்தை டெபாசிட் செய்ய சென்றுகொண்டிருந்த குப்தாவை சேத்தன் சிங் மற்றும் ரிஷி ராஜ் சிங் மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர். அத்துடன், அவரையும் சுட்டுக் கொன்றனர். இவர்களுக்காக சற்று தூரத்தில் வாகனத்துடன் காத்திருந்த கௌதம் சிங், அபய் சிங் மற்றும் ஐடன் சிங் ஆகியோரும் தப்பிச் சென்றுவிட்டனர்.


Advertisement

image

இந்த சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளையடித்து கொலை செய்த ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.86 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். அத்துடன், கொள்ளை மற்றும் கொலைக்கு முக்கிய காரணமானவரான வங்கி மேலாளரையும் போலீசார் கைது செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement