கேரளா: தீண்டாமை முடிதிருத்தும் மையத்தை மூடிய பட்டியலின நல ஆணையம்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரள மாநிலம் இடுக்கி வட்டவடா கிராம முடிதிருத்தும் மையத்தில் ”தீண்டாமை”மையத்தை மூடி பட்டியலின நல ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Advertisement

image
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ளது வட்டவடா மலை கிராமம். இந்த பகுதியில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில், பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களுக்கு முடிதிருத்தவும், சேவிங் செய்யவும் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முடி திருத்துவோர் நலச்சங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேரள மாநில பட்டியலின நல ஆணையத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் செய்தனர். அதன்படி, ஆணைய மாநில செயலாளர் ஹேமச்சந்திரன் நிகழ்விடம் சென்று மக்களிடம் தீண்டாமை செயல்கள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து அந்த குறிப்பிட்ட முடிதிருத்தும் மையத்தை மூட உத்தரவிட்ட அவர், அப்பகுதியில் பொது முடிதிருத்தும் மையம் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.


Advertisement

இதற்காக வட்டவடா ஊராட்சிக்கு அறிவுரை வழங்கப்பட்டு ஊராட்சி சார்பில் பொது முடிதிருத்தும் நிலையம் அமைக்க கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தீண்டாமை செயலில் ஈடுபட்ட அந்த முடிதிருத்துவோர் சங்கத்தினரிடம் பட்டியலின நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement