[X] Close

முதுமையால் மனவேதனை.. 15வது மாடியிலிருந்து குதித்து 94வயது மூதாட்டி தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதுமை பிரச்னைகள் காரணமாக, ஹரியானா மாநிலம் குருகிராமில் 15 வது மாடியில் இருந்து குதித்து 94 வயது மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.


Advertisement

 image

திங்கள்கிழமை காலை 7 மணியளவில் 15 வது மாடியிலுள்ள தனது வீட்டில் இருந்து குதித்து 94 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174 ன் கீழ் காவல்துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்தப் பெண் எழுதியதாகக் கூறப்படும் ஒரு குறிப்பையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர், அதில் அவர் தனது முதுமை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த தீவிரமான நடவடிக்கையை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில், மருமகள் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் நடைப்பயணத்திற்கு வெளியே சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Advertisement

பாதிக்கப்பட்டவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் குறிப்பில் வயதானதால் அடிக்கடி வருத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. திங்களன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த பெண்ணின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement