சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இருவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
மத்தியப் பிரதேசத்தில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான இருவர் போலீஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்!
 
மத்தியப் பிரதேசம்  மாநிலம்  ரத்லத்தில் கடந்த வாரம்  12 வயதான ஒரு சிறுமியின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் மக்காச்சோள தோட்டம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
பிரேதப் பரிசோதனையில் சிறுமி கும்பலாக வன்கொடுமை செய்யப்பட்டு, குளத்து தண்ணீரில் தலையை அமுக்கி கொன்று, உடலை மக்காச்சோள தோட்டத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது. இக்கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இக்கொலை வழக்கில் அடையாளம் காணப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த கல்லு, தீபக் மற்றும் ரவி என்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்துச் சென்றனர். இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வழியில் தீபக் மற்றும் ரவி இருவரும் போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.
 
இந்நிலையில் தப்பியோடிய இருவரின் படங்களையும் போலீசார் வெளியிட்டு, இவர்களை குறித்த தகவல் தருவோருக்கு ரூ.10,000 சன்மானம் அறிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
 
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இக்கொலை வழக்கில் கைதானவர்கள் தப்பியோடிய சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
loading...

Advertisement

Advertisement

Advertisement