"சசிகலா வரட்டும் பிறகு பார்க்கலாம்" - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சசிகலா வரட்டும் பிறகு பார்க்கலாம் என அமைசர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம் சசிகலா விடுதலைக் குறித்து கேள்வி எழுப்பியபோது ”சசிகலா வரட்டும் பிறகு பார்க்கலாம்”என்றார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பியபோது “ முதல்வர் கல்விக் கொள்கை குறித்து ஆராய இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாகவும் அவர்களின் பரிந்துரைப்படி கல்விக்கொள்கை குறித்தான முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


Advertisement

image

கிஸான் திட்ட ஊழல் குறித்து எழுப்பிய கேள்விக்கு “ கிஸான் அட்டைகள் பலவகைப்படும். அதில் ஒரு வகைதான் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிஸான் அட்டை. இந்த அட்டை முதலில் கிராம அலுவலர் மற்றும் தாசில்தார் அனுமதியோடு வழங்கப்பட்டது. அதன் பின்னர் வேளாண் இணை மற்றும் துணை இயக்குனர்கள் அனுமதியோடு வழங்கப்பட்டது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் நேரம் பிடிப்பதால் மத்திய அரசு அதனை அப்டேட் செய்யும் வசதியை விவசாயிகளிடமே கொடுத்தது. அதனால் தான் இம்முறையான ஊழல் நடந்தது”  என்று கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement