அமெரிக்க போலீஸாரால் சுடப்பட்ட கறுப்பின இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் என்பவரை காவலர் ஒருவர் தனது காலால் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைக் கண்டித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி கெனோஷா நகரிலும் கறுப்பினத்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சொல்லப்படுறது.
அப்போது தனது காரில் ஏறச்சென்ற 29 வயது மதிக்கத்தக்க ஜேக்கப் பிளேக் என்பவரின் மீதும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் படுகாயமடைந்த பிளேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர் பேசிய வீடியோ ஒன்றை அவரது வழக்கறிஞர் பென் க்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#JacobBlake released this powerful video message from his hospital bed today, reminding everyone just how precious life is. #JusticeForJacobBlake pic.twitter.com/87CYlgPDBj — Ben Crump (@AttorneyCrump) September 6, 2020
அந்த வீடியோவில் அவர் பேசும் போது “ உங்கள் வாழ்கை, அது உங்களுக்கான வாழ்கை மட்டுமல்ல. உங்களது கால்கள் உங்களின் தேவைக்காக முன்னோக்கிச் செல்ல வேண்டும். அப்போது இது போல நடக்கலாம். உங்களது விரல்கள் நொறுக்கப்படலாம். எனது வயிறு பின்பகுதியும் ஸ்டேபில்ஸால் இணைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் வலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது சுவாசிப்பதற்கு, சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு இடையூறுகா இருக்கிறது. இது ஒன்றுமில்லைதான் ஆனால் வலி இருக்கிறது.
நான் சொல்கிறேன். நாம் ஒன்றாக கூடலாம், பணம் சம்பாதிக்கலாம், நம்மைச் சார்ந்தவர்களுக்கு வெளிப்புறத்தில் அனைத்தையும் எளிதாக்கலாம். ஏனென்றால் வீணடிக்கப்பட்ட நேரமானது அதிகம் இருக்கிறது” என்று கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
குடியரசு தின கொண்டாட்டம்.. விவசாயிகள் பேரணி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்