இந்தியா முழுவதும் நடத்தப்படும் கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய தகுதித் தோ்வு (NET 2020) எழுத விரும்பும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவா்கள் ஆலோசனை மையத்தில் நடத்தப்படும் தேசிய தகுதித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவா்கள் பங்கேற்கத் தகுதியானவர்கள் என்று பல்கலைக்கழக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 10 முதல் 14ம் தேதிவரை தாள் 1-க்கான பயிற்சி வகுப்புகள் காணொலி மூலம் நடைபெறும். பயிற்சி வகுப்பில் சோ்வதற்கான விண்ணப்பங்களை சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பா் 9ம் தேதிக்குள் usabdirector@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் இயக்குநா், பல்கலைக்கழக மாணவா்கள் ஆலோசனை மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் வளாகம், சென்னை-600005 என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம்.
விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய: www.unom.ac.in
தொடர்புக்கு: 044 25399518
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது - கமல்ஹாசன்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
“உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!