‘சினிமா ஒரு பரமபதம் விளையாட்டைப் போன்றது’ - சமீரா ரெட்டி அதிர்ச்சி பேட்டி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
'காஸ்டிங் கவுச்' எனப்படும் நடிகைகளுக்கு இழைக்கப்படும் அசௌகரியமான சீண்டல்கள் குறித்து பகிர்ந்து அதிர வைத்துள்ளார் நடிகை சமீரா ரெட்டி.
 
சினிமாவையும் Casting Couch என்கிற வார்த்தையையும் பிரிக்க முடியாது போல. நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, உடலியல் ரீதியான தேவைகளுக்கு அழைக்கும் விவகாரம் அவ்வப்போது பூதாகரமாக வெடித்துக் கொண்டே இருக்கின்றன. நடிகைகள் சிலர் அதிரடியாக தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
 
image
 
அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டி தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
 
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அந்த படத்தில் முத்தக்காட்சி வைக்கப்பட்டதாகவும் முன்பே தெரிவிக்காததால் தான் நடிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் சமீரா ரெட்டி கூறினார். மேலும் தயாரிப்பாளர் தன்னை மாற்றிவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
 
image
 
மற்றொரு பாலிவுட் படத்தில் நடிக்கும்போது ஒரு ஹீரோ, தன்னை அணுகமுடியாத நடிகை என்று குறிப்பிட்டதாக அதிர்ச்சி கிளப்பியுள்ளார் சமீரா ரெட்டி. இது மிகவும் போரடிப்பதாகவும், ஜாலியாக இல்லை என்றும் கூறி மீண்டும் உங்களுடன் நடிக்க விரும்பவில்லை எனவும் அந்த ஹீரோ கூறியதாக நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு தான் அந்த ஹீரோவுடன் நடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
 
சினிமா என்பது ஒரு பரமபதம் விளையாட்டைப் போன்றது எனக்கூறிய சமீரா, தான் மற்ற நடிகர்களுடன் பார்ட்டி செல்வதில்லை, சகஜமாக பழகுவதில்லை என்றார். அது பட வாய்ப்புகளை கொடுக்கும் என்றாலும் தான் அதனை விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
loading...

Advertisement

Advertisement

Advertisement