சென்னை அருகே சொத்துக்காக தாயை மகனே வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஓட்டேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வேம்புலி அம்மன் கோயில் தெருவில் வசித்தவர் ஆலயம்மா (70). இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் மூத்த மகனான பூபதி கூலி வேலை செய்து வருகிறார். இவர் பல நாட்களாக தன் தாயிடம் சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி தன் தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தாய் ஆலயம்மாள் தற்போது சொத்தை பிரித்துக் கொடுக்க முடியாது என்று தன் மகனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் பூபதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன் தாயின் கழுத்து, கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே ஆலயம்மா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பெற்ற தாயையே மகனே கத்தியால் குத்தும் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்