இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இன்றைய போட்டியில் ரிஷாப் பன்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது. 3-வது போட்டியில் வெற்றிபெற்ற பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘இதுவரை ஆடும் லெவனில் இடம்பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்றைய போட்டியில் பார்மில் இல்லாத யுவராஜ் சிங்குக்குப் பதிலாக, ரிஷாப் பன்ட் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய வீரர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Loading More post
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!