திருச்சியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வெழுதிய நடிகை சாய்பல்லவி: சூழ்ந்த ரசிகர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2016-ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவம் படித்த சாய்பல்லவி, பயிற்சி மருத்துவராக தன்னை பதிவுசெய்ய திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வு எழுதினார். இவரை அடையாளம் கண்டுகொண்ட மாணவ,மாணவிகள் இவருடன் செல்ஃபி எடுத்து, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

image

தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமாக உள்ள நடிகை சாய் பல்லவி. இவர் நடிகையாவதற்கு முன்பே மருத்துவம் படித்துள்ளார். 2016-ம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து முடித்த சாய்பல்லவி இன்னும் இந்தியாவில் பயிற்சி மருத்துவராக தன்னைப் பதிவு செய்துகொள்ளவில்லை. தற்போது திரைப்படத் துறையை விட படிப்பில் அதிக ஆர்வம்காட்டி வரும் சாய்பல்லவி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு அங்கீகார தேர்வு எழுதுவதற்காக வந்திருக்கிறார்.


Advertisement

முகக்கவசம் அணிந்து சுடிதார் துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி தேர்வெழுத வந்த சாய் பல்லவியை, மற்ற தேர்வர்கள் எப்படியோ அடையாளம் கண்டுகொண்டனர். அதன்பிறகு அவருடன் சகஜமாக பேசி  செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். தற்போது இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement