மனைவியிடம் தவறாக நடந்தவரை தாக்கிய கணவர் : கொலையில் முடிந்த சம்பவம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மனைவியிடம் தவறாக நடந்தவரை கணவர் அடித்த நிலையில், தாக்கப்பட்டவர் 3 நாட்களுக்குப் பின் கணவரை கொன்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.


Advertisement

டெல்லியின் சதர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் சாகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவரது குடியிருப்புக்கு அருகே வசித்தவர் சுரேந்தர். இவர் கடந்த திங்கட்கிழமை அன்று சாகரின் மனைவி வீட்டிலிருந்தபோது அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனே எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளார்.

image


Advertisement

எச்சரிக்கை ஒலியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பெண்ணின் கணவர் சாகர், அங்கிருந்த சுரேந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதற்காக சுரேந்தரை தாக்கியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் குடியிருப்புக்கு வந்த சுரேந்தர், சாகரின் வீட்டு வாசலில் நின்று சத்தம் எழுப்பியுள்ளார். வெளியே வந்த சாகருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாகரின் கழுத்தில் சுரேந்தர் குத்தியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் சுரேந்தரை கைது செய்தனர்.

நாமக்கல்லில் லாரியில் கடத்தப்பட்ட 210 கிலோ கஞ்சா - மடக்கிப் பிடித்த போலீஸ்

loading...

Advertisement

Advertisement

Advertisement