விளையாட்டு வீரர்களைப் போல் நடிகர்களுக்கும் ஊக்கமருந்து சோதனை செய்யப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் அடுத்த திருப்பமாக அவரது காதலி ரியா சக்ரபோர்த்தியின் மீது டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரியா வாட்ஸ்அப் சாட்டிங்கை ஆய்வு செய்ததில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப்பொருள் கோணத்தில் விசாரிக்குமாறு தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இச்சூழலில் மத்தியப்பிரதேச மாநில அமைச்சர் விஸ்வாஸ் சாரங், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘’இந்த நாட்களில் இளைஞர்கள் நடிகர்களை தங்களுடைய ஹீரோக்களாக பின்பற்றுகிறார்கள். அவர்களின் ஆடை, நடை உட்பட அனைத்தையும் நகலெடுக்கிறார்கள். அவர்கள் இதேபோன்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
பாலிவுட் படங்களில் போதைப்பொருள் கட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. ராஜ்புத்தின் மரண வழக்கும் போதைப்பொருளோடு தொடர்பு பெறுகிறது. இது இளைஞர்களை போதைப்பொருள் மீதான ஆர்வத்தை உண்டுபண்ணி மோசமான விளைவுக்கு தள்ளும்.
விளையாட்டுத் துறையில் வீரர்களுக்கு ஊக்கமருந்துக்கான டோப் டெஸ்ட் செய்யப்படுவதுபோல் நடிகர்களையும் ஊககமருந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
போதைப்பொருள் உறுதி செய்யப்படும் திரை நட்சத்திரங்களை திரைப்படங்களில் நடிப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’’ என்று அவர் கடிதம் எழுதியுள்ளார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!