கல்லூரி தரவரிசைப் பட்டியலில் கார்ட்டூன் கேரக்டர் ”ஷின்சான்” பெயர் !!

West-Bengal---Shinchan-name-appears-in-college-B-Sc-merit-list

பிரபல ஜப்பானிய கார்ட்டூன் ஷின்சானின் பெயர் பி.எஸ்சி தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


Advertisement

இந்தியாவில் பெரும்பாலானவர்களால் விரும்பி பார்க்கப்படும் கார்ட்டூன்களில் ஒன்று ஜப்பானிய கதாபாத்திரமான ஷின்சான் நொஹாரா. கொரோனா காரணமாக கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்குவங்கத்தின் சிலிகுரியில் உள்ள ஒரு கல்லூரியின் பி.எஸ்சி (ஹானர்ஸ்) தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் ஷின்சானின் பெயர் இடம்பெற்றதாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் பெயர் இடம்பெற்ற சிறிதுநேரத்திலேயே அகற்றப்பட்டதாகவும், இந்த தவறான செயல்குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

image


Advertisement

ஏற்கனவே வேறு கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்களில் சன்னி லியோன் மற்றும் நேகா காக்கரின் பெயர் இடம்பெற்று அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அவர்களும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த தவறான செயல்களுக்காக சைபர் க்ரைம் விசாரணை நடத்தி வருகிறது

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement