கேரளாவில் ஓணம் திருவிழாவையொட்டி 1000 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்கப்பட்டுள்ளன.
ஆரம்ப காலங்களில் நமது தாத்தாக்கள் சுற்றி வந்த புல்லட்கள், வாகனத்துறையின் அசுர வளர்ச்சியாலும், புது வாகனங்களின் வரவாலும் அதன் பொலிவை லேசாக இழந்தது. இதனை மாற்றும் விதமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இக்காலத்து இளைஞர்களை கவரும் வண்ணம் அதில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்டுவந்தது. அந்த மாற்றங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. நீண்ட தூர பயணப் பேச்சு எழுந்தாலே, நீங்கள் ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கிறீர்களா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஓணம் திருவிழாவையொட்டி, கேரளாவில் 1000 ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விற்றுள்ளது.
இது குறித்து நிறுவனம் கூறும்போது “ கேரளாவில் மட்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு 59 டீலர்களும், 25 ஷோரூம்களும் உள்ளன. Interceptor,Continental GT 650, Himalayan,Classic 350 ஆகிய அனைத்து ரக வாகனங்களும் ஓணம் தினத்தன்று விற்கப்பட்டது. ராயல் என்ஃபீல்டு புதிய மாடலான Royal Enfield Meteor 350 இம்மாத புதுவரவாக வெளியிடப்படலாம்” எனக் கூறியது. விரைவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கான பிரத்யேக ஆப்பும் வெளியிடப்பட உள்ளதாம்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்