[X] Close >

“சிவன் கண்களை திறந்துவிட்டார்”என பரவிய வதந்தியால் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

sivan-idol-open-her-eyes--thousand-devotees-crowd-in-aruppukottai-temple

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஏனாதி நாயனார் திருக்கோயிலில் சிவன், கண்களை திறந்ததாக வந்த வதந்தியை நம்பி இரவு நேரத்தில் கொரோனாவை மறந்து தனிமனித இடைவெளி,முகக்கவசம் எதுவும் இல்லாம ஆயிரக்கணக்கான பக்தர்கள்  குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

image

அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளி சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீமத்  ஏனாதி நாயனார் திருக்கோயில். குறைவான பக்தர்களே வந்து செல்லும் இந்த கோயிலில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள சிவலிங்கம்  இரவு நேரத்தில் திடீரென கண்களைத் திறந்ததாக காட்டுத்தீ போல அருப்புக்கோட்டை நகரம் முழுவதும் வதந்தி பரவியது. சிவலிங்கம் கண்களைத்த் திறந்ததாக வந்த வதந்தியை நம்பி கொரோனாவை எல்லாம் மறந்துவிட்டு மக்கள் இரவு நேரத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் எதுவும் இல்லாமல் சாரைசாரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள்  குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

image

பக்தி பரவசத்தில் கடல்அலை போல் மிதந்து வந்த பக்தர்களை கட்டுப்படுத்த ஒரே ஒரு காவலர் மட்டுமே இருந்ததால் அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close