ஓணம் பண்டிகை "ஸ்பெஷல்" ! ஓடிடியில் வெளியாகும் மலையாள திரைப்படங்கள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பண்டிகைகள் என்றாலே அதில் திரைப்படங்களும் ஒரு அங்கம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதற்கேற்ப திரையரங்குகள் மூடிக் கிடக்கும் இன்றைய சூழலில், ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் மூன்று படங்களை வெளியிடுகின்றன ஓடிடி தளங்கள்.


Advertisement

image

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுக்க ஐந்து மாதங்களாய் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட் ஸ்டார் என ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல மொழிகளிலும் திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. அதிலும், பண்டிகை தினங்களில் திரையரங்குகளைப் போலவே திரைப் படங்களை வெளியிடும் முறையும் வழக்கமாகி வருகிறது.


Advertisement

image

அந்தவகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு "சி யூ சூன்", "மணியாறாயில் அசோகன் அசோகன்", கிலோமீட்டர்ஸ் & கிலோமீட்டர்ஸ் ஆகிய மூன்று மலையாள திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. "சி யூ சூன்" முழுக்க ஊரடங்கு நாட்களில் உருவாக்கப்பட்ட திரைப்படம். பகத் பாசில் தயாரிப்பில் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இணையம், வெப் கேமராவிலேயே முழு திரைப்படத்தையும் படமாக்கியிருக்கின்றனர். பகத் பாசிலுடன் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ஆகியோர் நடித்திருக்கும் "சி யூ சூன்" அமேசான் பிரைமில் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.

image


Advertisement

கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் திரைப்படம் சாலைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வருகிற 31-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன், கிருஷ்ண ஷங்கர் நடித்துள்ள " மணியாறாயில் அசோகன் " திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் வரும் 31-ம் தேதி வெளியிடுகிறது. முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement