பொம்மை ஆம்புலன்சை பார்த்து சமயோசித முடிவு.. தாயை காப்பாற்றிய 5 வயது மகன்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தன்னுடைய அம்மா மயக்கமடைந்து கீழே விழுந்தபோது சமயோசிதமாக செயல்பட்டு தாய் உயிரை காப்பாற்றியுள்ளான் 5 வயது சிறுவன்


Advertisement

ஐந்து வயது சிறுவன் தனது சமயோசித செயல்களுக்காக இணையத்தில் ஹீரோவாக புகழப்படுகிறார். அச்சிறுவனின் விரைவான சிந்தனை அவரது அம்மாவின் உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கிறது. 

இங்கிலாந்தின் வெஸ்ட் மெர்சியா காவல்துறை கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.


Advertisement

ஜோஷ் என்ற 5 வயதான சிறுவனின் அம்மா வீட்டில் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது வீட்டில் இருந்தது ஜோஷும் அவரது சகோதரரும் மட்டும்தான்.

imageஜோஷ், எந்த நேரத்தையும் வீணாக்காமல், ஐரோப்பாவில் அவசரகால சேவைகளுக்கான தொடர்பு எண்ணான 112-க்கு போன் செய்துள்ளார்.  இது அவரது தாய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெற உதவியது. ஆச்சரியம் என்னவென்றால், ஜோஷ் தனது பொம்மை ஆம்புலன்சில் அதைக் கவனித்த பின்னரே அந்த எண்ணுக்கு டயல் செய்துள்ளார்.

சிறுவனின் இச்செயலை வியந்து பாராட்டிய டெல்ஃபோர்டு உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிம் பேக்கர், ‘’இதுவொரு நம்பமுடியாத விஷயம். ஜோஷ் பதட்டமடையாமல் மிகவும் தைரியமாக இருந்தார்.  அவரது முழு சிந்தனையும் தனது அம்மாவை காப்பாற்றும் மனநிலையிலேயே இருந்தது. இந்த வயதில் இவ்வளவு மனத்தைரியம் உண்மையில் அசாதாரணமானது. எதிர்காலத்தில் ஜோஷ் ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியாக வருவார் என எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.


Advertisement

ஜோஷின் இச்செயலுக்காக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

loading...
Related Tags : JoshWest Mercia Police

Advertisement

Advertisement

Advertisement