உடுமலை: இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு இளம்பெண்ணை இழுத்துச்சென்ற நபர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உடுமலையில் இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு இளம் பெண்ணை அழைத்து சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் இர்பான் என்பவர் தனது காதலியுடன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

image


Advertisement

அப்போது அந்த இளம்பெண்ணின் அண்ணன் உட்பட மூன்றுபேர் இருச்சக்கர வாகனத்தில் வந்து இர்பானை கையில் வெட்டிவிட்டு அப்பெண்ணை இழுத்துச்சென்றனர். இதனிடையே இர்பானும் அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

image

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இர்பானை மீட்டு உடுமலை அரசு மருத்துவமணையில் முதல் சிகிச்சை செய்து மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement