நாமக்கல்லில் மூதாட்டி வெட்டிக்கொலை... தலைமறைவாக உள்ள மகனை தேடும் போலீசார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாமக்கல் அருகே சொத்து பிரச்னைக்காக மகனே தாயை கொலை செய்துள்ளாரா என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

image
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள சின்னபள்ளம்பாறை ஆலமரத்து தோட்டத்தில் உள்ள வீட்டில் பவளவாய் (75) என்ற மூதாட்டி தனது மகன் வேலுச்சாமியுடன் வசித்து வந்தார். இவர் நேற்று இரவு முகம் மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அங்கு வந்த மூதாட்டியின் மகள் மற்றும் உறவினர்கள் மூதாட்டி பவளவாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேந்தமங்கலம் போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் வேலுச்சாமியின் மனைவி, மகன்கள் பிரிந்து சென்ற நிலையில் தாயும், மகனும் தோட்டத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பவளவாயி தனது சொத்துக்களை பேரன்களுக்கு எழுதி வைத்துள்ளார். இதனால் பவளவாயிக்கும் வேலுச்சாமிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து வேலுச்சாமியே தனது தாயை கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ளாரா என சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
loading...
Related Tags : நாமக்கல்Namakkal

Advertisement

Advertisement

Advertisement