''சொந்த ஊரை விட சென்னையில் அன்பு அதிகம்'' - நெகிழும் சிஎஸ்கே வீரர்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை வாரம் கொண்டாடப்படும் நிலையில் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் சென்னை மீதான காதலை தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் 2020 அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. இதனிடையே அண்மையில் பயிற்சிக்காக சென்னை வந்த சிஎஸ்கே அணியினர் சில நாட்கள் பயிற்சிக்கு பின்னர் துபாய் சென்றடைந்தனர். சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட 16 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என 51 நபர்கள் தனி விமானத்தில் துபாய் சென்றனர். அங்கு தற்போது ஸ்டார் ஹோட்டல்களில் வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

image


Advertisement

ஐபிஎல் என்றாலே சேப்பாக்கம் களைகட்டி இருக்கும். ஆனால் இந்தமுறை போட்டிகள் இந்தியாவில் இல்லை என்பதால் சென்னை ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் உள்ளனர். அதேபோல் சென்னை அணி வீரர்களும் சென்னையை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளனர். சென்னை வாரம் கொண்டாடப்படும் நிலையில் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் சென்னை மீதான காதலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

image

எப்போது சென்னைக்கு சென்றாலும், அது ஒரு வீட்டைப் போலவே இருக்கும். காரணம், சென்னையில் எங்களுக்கு கிடைக்கும் அன்பானது சொந்த ஊரில் கிடைக்கும் அன்பை விடவும் அதிகம். ஐபிஎல்க்காக சென்னை வரும் போது எல்லா வீரர்களுமே அன்பின் அரவணைப்பில் நனைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement