ரூ.2 கோடிக்கு மேல் ஏலம் போன மகாத்மா காந்தியின் கண்ணாடி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரிட்டனில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி ரூ 2.55 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள பிரிட்டனைச் சேர்ந்த ஈஸ்ட் பிராஸ்டால் ஏல நிறுவனம் "சுமார் 4 வாரங்களுக்கு முன்பு எங்களுடைய கடிதப்பெட்டியில் இந்த மூக்குக்கண்ணாடி காந்தி பயன்படுத்தியது. இதனை காந்தியே என் மாமாவிடமே அளித்ததாக தெரிவித்திருந்தார். இந்தக் மூக்குக் கண்ணாடி காந்தி, தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது பயன்படுத்தியதாக ஏல நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


Advertisement

image

மேலும் பேசியுள்ள ஏல நிறுவனம் "இந்த ஏலம் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையை முதல் முறையாக கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துவிட்டது. காந்தியின் கண்ணாடியை ஏலம் எடுத்தவரின் பெயரை வெளியிட முடியாது. ஆனால் அவர் தென் மேற்கு இங்கிலாந்தின் மங்கோட்ஸ்பீல்டை சேர்ந்த முதியவர். இந்திய மதிப்பில் 2.55 ரூபாய்க்கு கண்ணாடியை ஏலம் எடுத்துள்ளார். அவர் தன் மகளுடன் வந்து ஏலம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்றார்".

loading...

Advertisement

Advertisement

Advertisement